< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேகாலயாவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிக்கின
|15 Aug 2022 4:29 AM IST
மேகாலயாவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஏராளமான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
ஷில்லாங்,
மேகாலயா மாநிலம் கிழக்கு கரோ மலை மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஏராளமான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
விமானத்தை சுட பயன்படுத்தப்படும் 79 ரவுண்டு தோட்டாக்கள், 7.7 எம்.எம். ரகத்தை சேர்ந்த 175 ரவுண்டு தோட்டாக்கள், 10 டெட்டனேட்டர்கள், ஒரு இரட்டைக்குழல் துப்பாக்கி, 250 கிராம் ஜெலட்டின் ஆகியவை கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்கும்.
கரோ தேசிய விடுதலைப்படை என்ற முந்தைய பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும், சண்டையில் கொல்லப்பட்டவருமான சோகன் டி.ஷிரா இவற்றை மறைத்து வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.