< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
9 May 2023 2:38 AM IST

பஞ்சாப்பில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே கடந்த சனிக்கிழமை இரவு மர்ம பொருள் வெடித்தது. கோவிலுக்கு அருகில் உள்ள ஹெரிடேஜ் தெருவில் மர்ம பொருள் வெடித்ததில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தார்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், இது குண்டு வெடிப்பு அல்ல என்றும், ஓட்டலில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடிப்பு என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 6.15 மணியவில் பொற்கோவில் அருகே உள்ள ஹெரிடேஜ் தெருவில் மீண்டும் மர்ம பொருள் வெடித்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த வெடிப்பை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொற்கோவிலுக்கு அருகே அடுத்தடுத்து மர்ம பொருட்கள் வெடித்த சம்பவம் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்