< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
என்டிடிவியின் மேலும் 26 சதவீத பங்குகள் அதானி குழுமம் வசம் வருகிறதா?
|24 Aug 2022 1:00 AM IST
என்டிடிவியின் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அதானி குழும நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
புதுடெல்லி,
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற என்டிடிவியின் 30 சதவீத பங்குகள், ஏற்கனவே அதானி குழும நிறுவனங்களிடம் உள்ளன.
இந்த நிலையில் என்டிடிவியின் மேலும் 26 சதவீத பங்குகளை ரூ.493 கோடிக்கு வாங்குவதற்கு அதானி குழும நிறுவனங்கள் முன்வந்து வெளிப்படையாக அறிவித்துள்ளன. இந்த 26 சதவீத பங்குகள் அதானி குழும நிறுவனங்கள் வசம் சென்று விட்டால், 56 சதவீத பங்குகளுடன் என்டிடிவியின் பெரும்பான்மை பங்குதாரராக அதானி குழும நிறுவனங்கள் மாறி விடும்.
என்டிடிவியின் பங்கு மதிப்பு இந்த ஆண்டில் மட்டுமே 300 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நேற்றைய இதன் விலை ரூ.366.20 ஆகும்.