< Back
தேசிய செய்திகள்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
17 Jun 2022 11:54 AM IST

ரயில்வேயில் வேலை தேடுபவர்களுக்காக தற்போது காலிப்பணியிடங்கள் ரயில்வேயால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

ரயில்வேயில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வே பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்காக, தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகள், பட்டறைகள் (ரயில்வே ஆட்சேர்ப்பு 2022) ஆகியவற்றில் அப்ரண்டிஸ் (ரயில்வே அப்ரண்டிஸ் 2022) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்தம் 465 காலியிடங்கள் இந்தப் பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது தவிரவிதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வை பொறுத்த வரையில், தகுதியே இதற்கான அடிப்படையாக அமையும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அறிவிப்பை முதலில் சரிபார்த்து, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்கு https://secr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் செய்திகள்