< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் 15 மக்களவை இடங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
தேசிய செய்திகள்

கேரளாவில் 15 மக்களவை இடங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Feb 2024 5:23 PM IST

வேட்பாளர்கள் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கேரள மாநிலத்தின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்று தங்கள் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்டார்.

முன்னதாக அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கேரள காங்கிரஸ்(எம்) ஆகியவை தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்களான ஏ.எம்.ஆரிப்(மக்களவை) மற்றும் இளமாரம் கரீம் (மாநிலங்களவை) ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.ஷைலஜா, டி.எம்.தாமஸ் ஐசக், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மற்றும் வி.ஜாய் ஆகியோரும் மக்களவை தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்