< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமித்ஷா, ஜே.பி. நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு?
|2 Oct 2023 4:15 PM IST
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி. நட்டாவை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அந்த தேர்தலை முன்னிறுத்தி தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், அண்ணாமலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது பாஜக-அதிமுக கூட்டணி முறிந்தது குறித்து மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவு 8 மணியளவில் ஜே.பி.நட்டாவை முதலில் அண்ணாமலை சந்தித்து பேசினார். அதனைதொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.