< Back
தேசிய செய்திகள்
அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
30 April 2024 2:13 AM IST

அமலாக்கத்துறையின் ரிட் மனு மீதான விசாரணை ஜூலை 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில். சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, 'அங்கித் திவாரி லஞ்ச வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய அமலாக்கத்துறையின் ரிட் மனு மீதான விசாரணை ஜூலை 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவை அதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்' என கோரினார்.

மேலும் அங்கித் திவாரி சார்பில் விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

மேலும் செய்திகள்