< Back
தேசிய செய்திகள்
கஸ்தூரி ரங்கனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
தேசிய செய்திகள்

கஸ்தூரி ரங்கனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

தினத்தந்தி
|
12 July 2023 2:43 AM IST

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனின் இதயம் சீராக இயங்குவதில் பிரச்சினை இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் ஆவார். 82 வயதான அவர் தேசிய கல்வி கொள்கை குழுவின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். நேற்று முன்தினம் இலங்கைக்கு சென்ற அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதையடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது. இதுபற்றி கஸ்தூரி ரங்கனுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் பகிரத் மற்றும் உதகனோல்கர் ஆகியோர் கூறுகையில், 'கஸ்தூரி ரங்கனுக்கு இதயம் சீராக செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது' என்றனர். கஸ்தூரி ரங்கன் தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்