< Back
தேசிய செய்திகள்
மக்களின் கவனத்தை ஈர்க்கும் அங்கன்வாடி கட்டிடம்
தேசிய செய்திகள்

மக்களின் கவனத்தை ஈர்க்கும் அங்கன்வாடி கட்டிடம்

தினத்தந்தி
|
29 July 2022 3:45 PM GMT

மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது .

பெங்களூரு:

பொதுவாக அங்கன்வாடி என்றால் விரிசல் விழுந்த சுவர்களும், பாழடைந்த கட்டிடங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டப்பள்ளாப்பூர் அருகே திம்மசந்திரா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி, கர்நாடக மாநிலத்திலேயே முன்மாதிரியான அங்கன்வாடியாக மாறி உள்ளது.


இந்த கிராமத்தில் இருந்த அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. தற்போது அந்த கட்டிடம் அகற்றப்பட்டு தனியார் நிறுவன பங்களிப்புடன் ரூ.22 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடியின் வடிவமைப்பே சற்று வித்தியாசமாக உள்ளது. குகை போன்று அமைந்துள்ள இந்த அங்கன்வாடியில், சமையல் அறை, கழிவறை, மாணவ-மாணவிகளின் அமரும் அறை என 3 அறைகள் உள்ளன.


அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த அங்கன்வாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சிறு குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த அங்கன்வாடி திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதேபோன்று மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் அங்கன்வாடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்