< Back
தேசிய செய்திகள்
ஆந்திரா ரெயில் விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
தேசிய செய்திகள்

ஆந்திரா ரெயில் விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

தினத்தந்தி
|
30 Oct 2023 1:13 AM IST

ஆந்திரா ரெயில் விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டதை அறிந்து வேதனையடைந்ததாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் பலாசா ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரெயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆந்திரா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதை அறிந்து வேதனையடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்