< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆந்திராவில் இளம் பெண் மீது திராவகம் வீச்சு
|15 Jun 2023 6:16 AM IST
ஆந்திராவில் இளம் பெண் முகத்தில் மர்ம நபர்கள் திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றனர்.
எலுரு,
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தை சேர்ந்த 35 வயது இளம் பெண் யத்லா பிராஞ்சிகா. இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டுக்கு அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் யத்லா முகத்தில் திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் யத்லாவின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் வலியால் அலறிதுடித்தபடியே வீட்டுக்கு ஓடி சென்றார். அங்கிருந்த அவரது பெற்றோர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திராவகம் வீசி விட்டு தலைமறைவான மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.