< Back
தேசிய செய்திகள்
அடிக்கடி உதட்டில் முத்தம்: கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி!
தேசிய செய்திகள்

அடிக்கடி உதட்டில் முத்தம்: கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி!

தினத்தந்தி
|
21 July 2023 8:48 PM IST

ஆந்திராவில் தனது கணவர் அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுக்க வருகிறார் என்று குற்றம் சாட்டிய மனைவி முத்தம் கொடுக்க வந்தபோது நாக்கை கடித்துத் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசாகப்பட்டினம்,

முத்தத்தைக் கொடுத்தாலும் சரி அன்பானவர்களிடம் இருந்து முத்தத்தை வாங்கினாலும் சரி உடலும் மனமும் உற்சாகம் பூசிக்கொள்ளும். காரணம் முத்தத்தினால் ரத்த அணுக்களின் ஒவ்வொரு செல்லும் உற்சாகமடைகிறது. அன்பான முத்தம் தொடங்கி மருத்துவ முத்தம் வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய முத்தங்கள் நிறைய உள்ளன.

முத்தம் என்பது உதடுகளின் சந்திப்பு மட்டுமல்ல. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு முத்தமும், மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வைக் கிளறிவிடும்.

இந்தநிலையில் ஆந்திராவில் தனது கணவர் அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுக்க வருகிறார் என்று குற்றம் சாட்டிய மனைவி ஆசையாய் முத்தம் கொடுக்க வந்தபோது அவரின் நாக்கை கடித்துத் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூர் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது மனைவியைச் சமாதானப்படுத்த லிப்கிஸ் முத்தம் கொடுக்க கணவர் முயன்றதாகத் தெரிகிறது.

ஆனால் லிப்கிஸ் முத்தத்தை மனைவி விரும்பாத நிலையில் கணவர் வலுக்கட்டாயமாகக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்வாறு லிப்கிஸ் கொடுக்க வந்த கணவனின் நாக்கை மனைவி கடித்ததால் படுகாயம் அடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வலுக்கட்டாயமாகக் கணவர் லிப்கிஸ் கொடுக்க முயன்றதால் நாக்கை கடித்ததாக போலீசாரிடம் மனைவி வாக்குமூலம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்