< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கன்டெய்னர் லாரியில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
|16 Sept 2023 10:44 PM IST
கன்டெய்னர் லாரியில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
அரியானாவில் இருந்து பெங்களூருக்கு ஒரு கன்டெய்னர் லாரியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொண்டு செல்லப்பபட்டன.
கன்டெய்னர் லாரி டிரைவர்கள் இருவரும் ஒபுலாபுரம் மிட்டா கிராமத்தில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தினர். பின்னர் கன்டெய்னரில் இருந்த செல்போன்களை வேறு ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கன்டெய்னர் காலியான நிலையில் லாரிகள் சாலையோரம் கேட்பாரற்று நிற்பது குறித்து லாரி உரிமையாளருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவர்களை தேடிவருகின்றனர்.