< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆந்திராவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 6 பேர் கைது
|7 Nov 2022 11:37 PM IST
ஆந்திராவில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 பேரை கைது செய்தனர்.
சித்தூர்,
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் இன்று கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.