< Back
தேசிய செய்திகள்
விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் மேற்கூரை விழுந்து விபத்து - 3 மாணவர்கள் காயம்
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் மேற்கூரை விழுந்து விபத்து - 3 மாணவர்கள் காயம்

தினத்தந்தி
|
9 Feb 2023 4:26 AM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரை விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரை செவ்வாய்க்கிழமை விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

விசாகப்பட்டினம் மாவட்டம் பத்மநாபம் மண்டலத்தில் உள்ள அர்ச்சகுனிபாலம் தொடக்கப்பள்ளியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள விஜயநகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்