< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் பலி
|10 Nov 2022 10:45 PM IST
வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதராபாத்,
ஆந்திரா - மேற்கு கோதாவரி மாவட்டம் கடியத்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.