< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தினத்தந்தி
|
8 Oct 2024 1:37 AM IST

தலைநகர் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

புதுடெல்லி,

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தலைநகர் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ரெயில்வே மண்டலம் உருவாக்குவது, உருக்கு ஆலையுடன், ராஷ்டிரிய இஸ்பத் நிகம் லிமிடெட் நிறுவனத்தை இணைப்பது, சமீபத்திய வெள்ள பாதிப்புகளுக்கு நிதி கோருவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடியுடன் விவாதித்ததாக தெலுங்குதேசம் கட்சி வட்டாரம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்