ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்; புகைப்பட தொகுப்பு
|ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
மும்பை,
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானியில்ன் இளைய மகன் ஆனந்த் அம்பானி (வயது 29). இவருக்கும் தொழிலதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சென்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் டோனி, மல்யுத்த வீரர் ஜான் சீனா, ஹாலிவுட் நடிகர் நடிகைகள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு பின்வருமாறு:-