< Back
தேசிய செய்திகள்
தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் எங்கே? -  ஆனந்த் சர்மா சரமாரி கேள்வி
தேசிய செய்திகள்

''தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் எங்கே?'' - ஆனந்த் சர்மா சரமாரி கேள்வி

தினத்தந்தி
|
29 Aug 2022 2:49 AM IST

தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் எங்கே? என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தி தலைவர் ஆனந்த் சர்மா சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தபோது, அதிருப்தி தலைவர்கள் குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா சரமாரி கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியலை இன்னும் எந்த மாநில காங்கிரஸ் கமிட்டியும் பெறவில்லை என்று எனக்கு புகார்கள் வருகிறது. அப்படி செய்வது தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மையை மீறும் செயல்.

வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும் கேள்விப்பட்டேன். கட்சியின் சட்ட திட்டங்களின்படி உரிய நடைமுறை பின்பற்றப்படுகிறதா? இல்லையா? மேலும், வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அவர் பேசினார்.

அதற்கு பதில் அளித்த கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியதாவது:-

தலைவர் தேர்தலில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள். அவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு விட்டது. அவர்களின் பட்டியல், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும், மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்