< Back
தேசிய செய்திகள்
மன வயதை மதிப்பிடுவதற்கு தேர்வு- ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வைரல் டுவீட்..!!
தேசிய செய்திகள்

மன வயதை மதிப்பிடுவதற்கு தேர்வு- ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வைரல் டுவீட்..!!

தினத்தந்தி
|
3 Oct 2022 11:17 PM IST

ஆனந்த் மகேந்திரா மனநல மருத்துவ பள்ளியின் ஒரு வினாத்தாளின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

சென்னை,

நாட்டின் முன்னணி நிறுவனமான மகேந்திர நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. முன்னணி தொழிலதிபரான இவர் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

தனிமனிதர்களின் சாதனைகள், தனித்துவமான விஷயங்கள் போன்றவற்றை கண்டறிந்து அவற்றை ஆனந்த் மகேந்திரா பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் சமீபத்திய பதிவு ஒன்று மீண்டும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பதிவில் ஆனந்த் மகேந்திரா, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவ பள்ளியின் ஒரு வினாத்தாளின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதன்மூலம் ஒருவருடைய மன வயதை கண்டறிய முடியும் என சொல்லப்படுகிறது.

அந்த தாளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் படிப்பதற்கு நம்மை குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அவற்றை வாய்விட்டு படித்து முடிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 50 வயதை கடந்தவர்களால் இந்த தேர்வில் வெற்றிபெற இயலாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாளை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா,"இது ஒரு அற்புதமான துல்லியமான சோதனை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு நண்பர் இந்த தேர்வை என்னை எடுக்கும்படி வற்புறுத்தினார். மறுக்க முடியாத முடிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் பகிர்ந்துள்ள இந்த வினாத்தாள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்