< Back
தேசிய செய்திகள்
கிணற்றில் விழுந்த பூனைக்காக தன் உயிரை பணயம் வைத்த முதியவர்..! கேரளாவில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

கிணற்றில் விழுந்த பூனைக்காக தன் உயிரை பணயம் வைத்த முதியவர்..! கேரளாவில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
12 Jun 2022 6:04 PM IST

கேரளாவில் கிணற்றில் விழுந்த பூனையையும், முதியவரையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோழிக்கோடு,

கேரளா மாநிலம் பாலக்காட்டிலுள்ள பராலி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் ஆசையாய் வளர்த்து வந்த பூனை ஒன்று 40 அடி கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துள்ளது .இதனை பார்த்த முதியவர் பூனையை காப்பாற்ற கிணற்றில் கயிறு கட்டி இறங்கியுள்ளார்.

ஆனால் அவரால் மீண்டும் மேலே வர முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வந்த தீயணைப்புத்துறையினர், பூனையையும், முதியவரையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்