பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி; சரிவை நோக்கி இந்திய பங்கு சந்தைகள்
|பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்த சூழலில், பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி உள்ளன.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 133.44 புள்ளிகள் சரிவடைந்து (0.23 சதவீதம்) 57,492.47 புள்ளிகளாக உள்ளது.
இதில், டாக்டர் ரெட்டிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் எச்.சி.எல். டெக் உள்ளிட்ட பங்குகள் அதிக லாபத்துடன் உயர்ந்து காணப்பட்டன.
விப்ரோ, எச்.டி.எப்.சி., எச்.டி.எப்.சி வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, டி.சி.எஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 31.90 புள்ளிகள் சரிந்து (0.19 சதவீதம்) 17,091.70 புள்ளிகளாக உள்ளது.
இந்தியாவில் நுகர்வோர் விலை குறியீடு 5 மாதங்களில் இல்லாத வகையில் 7.41 சதவீதம் என்ற அளவில் கடந்த செப்டம்பரில் உயர்ந்து உள்ளது. இதனால், பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்த கூடும் என்ற அச்சம் மற்றும் சர்வதேச சந்தையில் தளர்வு ஏற்பட்ட நிலை ஆகியவை இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்து சரிவை நோக்கி காணப்படுகின்றன.