< Back
தேசிய செய்திகள்
வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த தனியார் நிறுவன ஊழியர்
தேசிய செய்திகள்

வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த தனியார் நிறுவன ஊழியர்

தினத்தந்தி
|
30 July 2022 3:42 AM IST

வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு, தனியார் நிறுவன ஊழியர் முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முகமது அக்ரம், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தஸ்சியா. இந்த நிலையில், தனது கணவர் மீது சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் தஸ்சியா பரபரப்பு புகாா் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனக்கும் கணவருக்கும் திருமணம் நடந்த போது ரூ.30 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் மேலும் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்துகிறார். ரம்ஜானுக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த போது ரூ.10 லட்சம் வாங்கி வந்தால், வீட்டுக்கு வரும்படியும், இல்லையெனில் வர வேண்டாம் என்று கூறினார்.

பணம் இல்லாவிட்டாலும் நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றேன். அப்போது ரூ.10 லட்சம் வரதட்சணை வாங்கி வராததால், தன்னிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக ெதரிவித்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கூறி இருந்தார். இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் முகமது அக்ரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்