< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் 5 முறையாக நிலநடுக்கம்: மக்கள் பீதி
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 5 முறையாக நிலநடுக்கம்: மக்கள் பீதி

தினத்தந்தி
|
24 Aug 2022 2:28 AM IST

இந்த நிலநடுக்கங்களால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஜம்மு,

காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் நேற்று அதிகாலை 2.20 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கத்ராவுக்கு கிழக்கே 61 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் தோடாவை மையமாக வைத்து 3.21 மணிக்கும், உதம்பூரை மையமாக வைத்து 3.44 மணிக்கும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதேநேரம் உதம்பூரை மையமாக கொண்டு மீண்டும் 8.03 மணிக்கு 4-வது நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளுக்கு கீழே பதிவான இந்த நிலநடுக்கங்களால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. எனினும் அதிகாலையில் 6 மணி நேரத்துக்குள் 4 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரின் மையமாக வைத்து 71 கிமீ தொலைவில் இரவு 11:23 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்