< Back
தேசிய செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
19 Feb 2023 1:45 PM IST

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பாசர்,

அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு கமெங் மாவட்டத்தில் இன்று மதியம் 12.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு கமெங் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நில நடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்