டேங்கர் மூலம் குடிநீர் வினியோகிக்க மேலும் ரூ.5.14 கோடி ஒதுக்கீடு-மந்திரி பிரியங்க் கார்கே தகவல்
|கிராமங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய மேலும் ரூ.5.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
பெங்களூரு:-
குடிநீர் வினியோகம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பாா்த்த அளவுக்கு பொய்யவில்லை. இதுவரை சுமார் 29 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதனால் வரும் நாட்களில் மழை பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை பற்றாக்குறை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதாவது 101 தாலுகாக்கள், 366 கிராம பஞ்சாயத்துகள், 514 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 254 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் 465 தனியாா் ஆழ்துளை கிணறுகளை வாடகை அடிப்படையில் அரசு பயன்படுத்தி வருகிறது.
மேலும் ரூ.5.14 கோடி
இதற்கு முன்பு டேங்கர் மூலம் நீர் வினியோகம் செய்ய ரூ.4.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மேலும் ரூ.5.14 கோடி நித ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஏற்கனவே மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியை மாநில அரசு வழங்கியுள்ளதாக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.