< Back
தேசிய செய்திகள்
அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே வெடிவெடிப்பு… பலர் காயம் என தகவல்..!
தேசிய செய்திகள்

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே வெடிவெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

தினத்தந்தி
|
7 May 2023 9:51 PM IST

பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

அமிர்தசரஸ்,

பஞ்சாபின் கோல்டன் டெம்பிள் என அழைக்கப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே வெடிவிபத்து நடந்துள்ளது. சரகர்ஹி சாராய் என்ற குடியிருப்பு பகுதிக்கு முன்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வெடிவிபத்தின் போது அருகில் உள்ள உணவகம் மற்றும் சரகர்ஹி சாராய் ஆகியவற்றின் ஜன்னல் கண்ணாடிகள்உடைந்து இருந்தாக கூறப்படுகிறது, இதனால் அருகிலுள்ள பாதசாரிகள் காயமடைந்துள்ளனர். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி, சம்பவம் நடந்த போது அருகில் ஆட்டோவில் இருந்த சுமார் ஆறு சிறுமிகள் கண்ணாடித் துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்திற்கான சரியான காரணத்தை தடயவியல் குழுக்கள் விசாரித்து வருவதாக, கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் டாக்டர் மெஹ்தாப் சிங் தெரிவித்தார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உறுதியளித்த காவல்துறை அதிகாரிகள், மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அமைதி காக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இது பயங்கரவாத தாக்குதல் அல்ல, வெறும் விபத்து தான் என போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த வெடி விபத்து ஒரு பயங்கரவாதிகள் தாக்குதாலாக இருக்க கூடுமோ என பீதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்