< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக மாநில முதல் மந்திரியிடம் அமித் ஷா பேச்சு
|20 July 2023 11:30 AM IST
மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா, மணிப்பூர் முதல் மந்திரியிடம் கேட்டறிந்தார்.
புதுடெல்லி,
மணிப்பூர் கலவரம் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகப் பிரதமர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதற்கிடையே மணிப்பூர் மாநில முதல் மந்திரி பைரன் சிங்குடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து அவர் மணிப்பூர் முதல் மந்திரியிடம் கேட்டறிந்தார்.