< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'இந்தியாவின் மிகப்பெரிய பப்பு' அமித்ஷாவின் கார்ட்டூன் படத்துடன் டி ஷர்ட் அணிந்த திரிணாமூல் காங். எம்.பி
|9 Sept 2022 3:41 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என்ற வாசகத்துடன் அமித்ஷா படமும் இடம் பெற்றிருந்த டி ஷர்ட்டை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் அணிந்து இருந்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே வார்த்தை மோதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. மத்தியில் பாஜகவுக்கு எதிராக அணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டி வரும் மம்தா பானர்ஜி இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்
இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பப்பு என்ற வாசகத்துடன் அமித்ஷா படமும் இடம் பெற்றிருந்த டி ஷர்ட்டை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் அணிந்து இருந்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை பப்பு என்ற அடைமொழியுடன் பாஜக விமர்சித்து வரும் நிலையில் அமித்ஷவை பப்பு என்று திரிணாமூல் கேலி செய்து பரபரப்பை கிளப்பியிருக்கிறது.