< Back
தேசிய செய்திகள்
தமிழக எம்.பிக்களை நாளை மறுநாள் சந்திக்கிறார் அமித்ஷா
தேசிய செய்திகள்

தமிழக எம்.பிக்களை நாளை மறுநாள் சந்திக்கிறார் அமித்ஷா

தினத்தந்தி
|
11 Jan 2024 6:23 PM IST

வெள்ள பாதிப்பு தொடர்பாக எம்.பி.க்கள் குழுவினரை டெல்லியில் அமித்ஷா சந்திக்கிறார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் நாளை மறுநாள் சந்திக்கிறது. வெள்ள பாதிப்பு தொடர்பாக எம்.பி.க்கள் குழுவினரை டெல்லியில் அமித்ஷா சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது தமிழக பேரிடர் நிவாரணமாக ரூ. 37, 907.19 கோடி நிதியை வழங்குமாறு எம்.பி.க்கள் குழு வலியுறுத்த உள்ளது.

ஏற்கனவே தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதி வழங்க கோரி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்