மத்திய மந்திரி அமித்ஷா பிப்ரவரி 23-ஆம் தேதி கர்நாடகா பயணம்
|வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி மத்திய மந்திரி அமித்ஷா கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பெங்களூரு,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வரும் பிப்ரவரி 23-ம் தேதி கர்நாடகாவுக்குச் சென்று பெங்களூரு மற்றும் பெல்லாரியில் நடைபெறும் இரண்டு முக்கிய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.
பெங்களூருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்கிறார் என்றும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க, கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெல்லாரி மாவட்டத்திற்கு விமானம் மூலம் செல்லும் உள்துறை மந்திரி, அங்கு சந்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இது தொடர்பாக கர்நாடக போக்குவரத்து மற்றும் எஸ்டி நலத்துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு இன்று பெல்லாரி மற்றும் சந்தூரில் கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமித் ஷாவின் கர்நாடக பயணம் 12 நாட்களில் இரண்டாவது முறையாகும். முன்னதாக பிப்ரவரி 11ஆம் தேதி தக்ஷின கன்னடா மாவட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.