இந்தியில் மருத்துவக் கல்வி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; பாஜக
|இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கி வைப்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என மத்தியப் பிரதேச பாஜக மந்திரி தெரிவித்துளார்.
போபால்,
இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கி வைப்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என மத்தியப் பிரதேச பாஜக மந்திரி தெரிவித்துளார்.
இந்தியாவில் முதல்முறையாக இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை மத்திய பிரதேசத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக மத்திய பிரதேச மருத்துவத்துறை மந்திரி விஷ்வாஸ் சாரங் கூறியதாவது: இது மிகப்பெரிய நாள். நாட்டில் முதல் முறையாக இந்தி மொழியில், மருத்துவத் துறை பாடப்புத்தகங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
முதல்கட்டமாக உடற்கூறியல், உடலியல், உயிரிவேதியியல் ஆகிய துறைகளுக்கான புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு சாத்தியமாகவுள்ளது. இதனால், எந்த படிப்பும் இனி இந்தி மொழியில் சாத்தியப்படும். இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக இந்தி மொழியை பின்னணியாகக் கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.