< Back
தேசிய செய்திகள்
நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை - அமித்ஷா
தேசிய செய்திகள்

நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை - அமித்ஷா

தினத்தந்தி
|
28 Aug 2022 12:07 AM IST

நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தினார்.

சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று திறந்து வைத்தார்.

நக்சலைட்டு பிரச்சினை

அப்போது பேசிய அவர், 'நாட்டில் நக்சலைட்டு பிரச்சினையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.

நக்சலைட்டு பிரச்சினையும், பயங்கரவாத பிரச்சினையும் மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டவை மட்டும் அல்ல. அது நாட்டின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினையும்கூட. இவை இரண்டும் ஒழிக்கப்படாதவரை, எந்த நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சியும் சாத்தியமில்லை.'

இவ்வாறு அவர் கூறினார்.

பண்டிகை வாழ்த்து

மேலும் போலா பண்டிகையை கொண்டாடும் சத்தீஷ்கார் மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளை அமித்ஷா தெரிவித்துக் கொண்டார். 'நமது முன்னோர்கள் சிந்தனையோடு பல பண்டிகைகளை உருவாக்கியுள்ளனர். விவசாயம், அதன் விளைபொருட்கள் தொடர்பான இப்பண்டிகை வெகு சிறப்பானது' என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்