புதிய நாடாளுமன்ற கட்டிடம்: " சிறப்பிடத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கம்" - அமித்ஷா புகழாரம்
|புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு, சிறப்பிடத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
புதுடெல்லி,
புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, 'எனது நாடாளுமன்றம் எனது பெருமை' ஹேஷ்டேக்குடன் நேற்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'புதிய நாடாளுமன்றத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். இந்த கம்பீரமான கட்டிடம், மக்களின் விருப்பங்கள் ஆக்கபூர்வமாக மலரும் இடம் மட்டுமல்ல. ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் அடையாளமும் ஆகும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியால் நிறுவப்பட்டுள்ள செங்கோல், நாட்டின் கலாசார பராம்பரியத்தையும், தற்காலத்தையும் இணைக்கிறது. நமது செழுமையான கலாசாரத்தில் நீதிக்கான முக்கியத்துவத்தையும் வருங்கால தலைமுறையினருக்கு அது தொடர்ந்து நினைவுபடுத்தும் என்று கூறியுள்ளார். சாதனை காலத்தில் புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடித்தவர்களுக்கும் உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.