< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்கு சொந்தமானது - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு
|11 Dec 2023 9:52 PM IST
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி,
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மசோதா இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதம் நடைபெற்று மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை மந்திரி அமித்ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்கு சொந்தமானது. அதை நம்மிடமிருந்து யாரும் பறிக்க முடியாது இதை நான் மீண்டும் உறுதியாக தெரிவிக்கிறேன்' என்றார்.