< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இட ஒதுக்கீட்டு கொள்கையை ஒருபோதும் மோடி அரசு மாற்றாது: அமித்ஷா
|20 April 2024 11:52 AM IST
10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் அதை தவறாக பயன்படுத்தவில்லை என்று அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி,
மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் அமைப்பையே பா.ஜனதா மாற்றிவிடும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், அப்படிப்பட்ட ஒரு எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் நினைத்து இருந்தால் முன்பே அரசியல் அமைப்பை மாற்றியிருப்போம் என்று உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கூறினார்.
இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:- 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் இருந்தாலும் நங்கள் அதை தவறாக பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சிக்குத்தான் பெரும்பான்மையை தவறாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இட ஒதுக்கீட்டு கொள்கையை ஒருபோதும் மோடி அரசு மாற்றாது. நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.வேறு யாரையும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட விட மாட்டோம்" என்றார்.