< Back
தேசிய செய்திகள்
முத்தலாக், சட்டப்பிரிவு 370, ராமர் கோவில்... ராகுல்காந்தியிடம் 5 கேள்விகளை எழுப்பிய அமித்ஷா
தேசிய செய்திகள்

'முத்தலாக், சட்டப்பிரிவு 370, ராமர் கோவில்...' ராகுல்காந்தியிடம் 5 கேள்விகளை எழுப்பிய அமித்ஷா

தினத்தந்தி
|
12 May 2024 9:55 PM GMT

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கியதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? என்று அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

ரேபரேலி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியுடன் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். நேற்று அத்தொகுதியில் பா.ஜனதாவுக்காக பிரசாரம் செய்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராகுல்காந்திக்கு 5 கேள்விகள் விடுத்தார். அவர் பேசியதாவது:-

ராகுல்காந்திக்கு நான் பகிரங்கமாக 5 கேள்விகள் விடுக்கிறேன்.

1. 'முத்தலாக்' முறையை பிரதமர் மோடி ஒழித்துக்கட்டினார். அது நல்லதா? கெட்டதா? நீங்கள் 'முத்தலாக்'கை திரும்ப கொண்டுவர விரும்புகிறீர்களா? இல்லையா?

2. முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு பதிலாக, பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமா? கூடாதா?

3. பிரதமர் மோடி நடத்திய துல்லிய தாக்குதல் நல்லதா? கெட்டதா? துல்லிய தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, அதை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

4. அயோத்தி ராமர் கோவிலுக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை?

5. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கியதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

இந்த 5 கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டுத்தான், ரேபரேலி மக்களிடம் ராகுல்காந்தி வாக்கு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்