< Back
தேசிய செய்திகள்
நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் அமித் ஷா
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் அமித் ஷா

தினத்தந்தி
|
28 May 2024 8:38 PM IST

நாளை மறுநாள் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வருகிறார்

புதுடெல்லி ,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 30ம் தேதி தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷா தமிழக வருகை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் தமிழகம் வரும் அமித் ஷா திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதை அடுத்து, அமித் ஷாவும் தமிழகம் வர இருக்கிறார்.

30ம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அங்குள்ள விவேகானந்தர் பாறையில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்