< Back
தேசிய செய்திகள்
சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
தேசிய செய்திகள்

சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

தினத்தந்தி
|
20 April 2024 1:59 PM IST

அமித் ஷாவுக்கு ரூ.15.77 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.26.32 லட்சமும் கடன் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,சொந்தமாக கார் கூட இல்லை: அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள் துறை மந்திரியுமான அமித் ஷா, குஜராத் மாநிலம், காந்தி நகரில் போட்டியிடுகிறார். அமித்ஷா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும், சொந்த கார் இல்லை எனவும் அமித் ஷா பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அமித் ஷா மனைவி சோனல் ஷாவுக்கு ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் ரூ.22.46 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ. 9 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் அடங்கும்.

அமித் ஷாவுக்கு ரூ.15.77 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.26.32 லட்சமும் கடன் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் ஆண்டு வருமானம் 2022-23ல் ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பி-க்கான சம்பளம், வீடு மற்றும் நில வாடகைகள், விவசாய வருமானம், பங்குகள் மற்றும் ஈவுத்தொகை ஆகியவை தனது வருமான ஆதாரங்கள் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்