< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு.. அழைப்பு விடுத்த அமித்ஷா
தேசிய செய்திகள்

மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு.. அழைப்பு விடுத்த அமித்ஷா

தினத்தந்தி
|
16 Oct 2022 11:01 PM IST

வரும் 27 மற்றும் 28ம் தேதி மாநில உள்துறை அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

புதுடெல்லி,

இம்மாத இறுதியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களுக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 27 மற்றும் 28ம் தேதி மாநில உள்துறை அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு அமைச்சருடன் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் ஆலோசனையில் உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையின் நவீனமயமாக்கல், போதைப்பொருள் கடத்தலின் ஆபத்து, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் உள்துறையை கவனித்து வருவதால் அவருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்