< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
|19 July 2022 3:09 PM IST
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத் தொடர் நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.பின்னர் மீண்டும் அவை கூடியதும் தொடர் அமளி நீடித்தது. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.