< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அம்பேத்கர் பிறந்தநாள்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
|14 April 2024 10:34 AM IST
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி,
அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் மரியாதை செலுத்தினார்.