< Back
தேசிய செய்திகள்
ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு
தேசிய செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு

தினத்தந்தி
|
28 Dec 2023 8:20 PM IST

கட்சியில் இணைந்த அம்பத்தி ராயுடுவிற்கு சால்வை அணிவித்து ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார்.

அமராவதி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, இன்று ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அம்பத்தி ராயுடு இணைந்துள்ளார்.

கட்சியில் இணைந்த அம்பத்தி ராயுடுவிற்கு சால்வை அணிவித்து ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார். இந்நிகழ்வின்போது துணை முதல்-மந்திரி கே.நாராயணசாமி, மக்களவை எம்.பி. மிதுன் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்