< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை ஜனாதிபதியிடம் வழங்கினர்
|14 Sept 2022 10:37 PM IST
சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை ஜனாதிபதியிடம் அளித்தனர்
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரியா அரபு குடியரசு, செக் குடியரசு, காங்கோ குடியரசு, நவ்ரு குடியரசு, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
இந்தியாவுக்கான தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிரியா அரபு குடியரசு தூதர் டாக்டர் பாசாம் அல்கத்தீப், செக் குடியரசு தூதர் டாக்டர் எலிஸ்கா சிக்கோவா, காங்கோ குடியரசு தூதர் ரெயிமண்ட் செர்ஜி பாலே, நவ்ரு குடியரசு துணைத் தூதர் மார்லன் இனம்வின் மோசஸ், சவுதி அரேபியா தூதர் சாலிஹ் ஈத் அல் –ஹூசைனி ஆகியோரின் நியமனங்களை ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுகொண்டார்.