அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆய்வு
|அமர்நாத் யாத்திரை ஏற்பாடுகள் குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.
புதுடெல்லி.
புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.
இந்த யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகள் முயற்சி செய்வதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலுக்கு மத்தியில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்டக்கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் இருப்பார்கள், மேலும் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து சிக்கல்களும் விவாதிக்கப்படும்" என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 3.45 லட்சம் பேர் புனித யாத்திரையில் கலந்துகொண்டனர். "அவர்களில் நாற்பத்தைந்து சதவீதம் பேர் பால்டால் வழியிலும், மீதமுள்ள 55 சதவீதம் பேர் பஹல்காம் வழியாகவும் வருகை தந்தனர்.
இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயரும் என்று நாங்கள் கருதுகிறோம், எனவே அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .