எப்போதும் உனக்காக, உனை காக்க... தோழியை அடி வாங்காமல் தடுத்து, போராடிய செல்ல பிராணி
|தோழியை அடி வாங்க விடாமல் தடுத்து, போராடும் செல்ல பிராணியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
வளர்ப்பு பிராணிகள் மனிதர்களுக்கு இணையாகவும், அதற்கும் மேலாகவும் அன்பை பகிர்பவைகளாக உள்ளன. அதனை அவற்றை வளர்ப்பவர்கள் நன்றாக உணர முடியும்.
செல்ல பிராணியான நாய் ஒன்று சிறுமியான தனது தோழி மீது அன்புடன் இருக்கிறது. இந்த நிலையில், தனது தோழியை அடிக்க வரும் சிறுமியின் தாயிடம் இருந்து, பாதுகாப்பதற்காக அந்த செல்ல பிராணி போராடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில், செல்ல நாய் ஓரத்தில் நிற்கிறது. சிறுமியான அதன் தோழி தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரை நோக்கி சிறுமியின் தாயார் நெருங்கி வந்து, அடிக்க கையை ஓங்குகிறார்.
இதனை சற்று தொலைவில் இருந்து கவனித்து விட்ட செல்ல நாய் ஓடி வந்து, அடிக்க விடாமல் அந்த பெண்ணை தடுக்க முயல்கிறது. எனினும், சிறுமிக்கு ஓரிரு செல்ல அடிகள் விழுகின்றன.
இதனால், அந்த நாய் சிறுமியின் தோளை பின்னால் இருந்து பற்றி கொண்டு அடிக்க விடாமல் தடுக்க முயல்கிறது. பின்பு, முன்புறம் வந்து பெண்ணை நோக்கி மெல்ல குரைக்கிறது. குதித்தும், அவரை தடுக்க பாய்கிறது. சுற்றி சுற்றி வருகிறது.
அந்த சிறுமியும் இதனை கவனித்து, சிரித்தபடி நகராமல் இருக்கிறார். இந்த வீடியோவுக்கு 5.5 ஆயிரம் பேர் லைக்குகள் அளித்துள்ளனர். பலரும் வெவ்வேறு விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க... அப்பா வருகிறார், சீக்கிரம் படி... சிறுமியை அறிவுறுத்திய புத்திசாலி நாய்; வைரலாகும் வீடியோ