< Back
தேசிய செய்திகள்
அக்டோபர் மாதம் முதல் மானிய உரங்கள் பாரத் பெயரில் விற்பனை - மத்திய மந்திரி
தேசிய செய்திகள்

அக்டோபர் மாதம் முதல் மானிய உரங்கள் 'பாரத்' பெயரில் விற்பனை - மத்திய மந்திரி

தினத்தந்தி
|
28 Aug 2022 1:29 AM IST

அக்டோபர் மாதம் முதல் மானிய உரங்கள் ‘பாரத்’ பெயரில் விற்பனை செய்யப்படும் என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உர மானிய திட்டமான 'பிரதம மந்திரி பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா'வின் கீழ், 'ஒரே நாடு ஒரே உரம்' என்ற புதிய முயற்சியை மத்திய வேதிப்பொருள் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.

அதன்படி, யூரியா, டி.ஏ.பி. உள்பட மானியம் பெறும் அனைத்து உரங்களும் வரும் அக்டோபர் மாதம் முதல் 'பாரத்' என்ற ஒரே பிராண்டில்தான் விற்பனை செய்யப்படும்.

விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரம் கிடைக்கும் வகையிலும், சரக்கு மானியத்தை குறைக்கும்வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்