< Back
தேசிய செய்திகள்
ஜெய்ப்பூரில் இன்று அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மாநாடு
தேசிய செய்திகள்

ஜெய்ப்பூரில் இன்று அனைத்து மாநில டி.ஜி.பி.க்கள் மாநாடு

தினத்தந்தி
|
5 Jan 2024 9:48 AM IST

இந்த மாநாட்டில் பிரதமா் மோடி நாளை பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

ஜெய்பூர்,

ஒவ்வொரு மாநில டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் பங்கேற்கும் மாநாடு ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் மோடி நாளை பங்கேற்று உரையாற்ற உள்ளார். கடந்த 2013 வரையில் இந்த மாநாடு டெல்லியில் மட்டும் நடைபெற்று வந்தது. 2014 முதல் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதிலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி. க்கள் நேரடியாகவும், 200-க்கும் மேற்பட்டவா்கள் இணையவழியாகவும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனா். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், இணையவழி மோசடிகள், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழைய சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம், ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதம், இணையவழி குற்றங்கள், காலிஸ்தான் ஆதரவு குழுவினரின் சட்ட விரோத செயல்பாடுகள், மாவோயிஸ்ட் பிரச்சினை, மாநிலங்களுக்கு இடையேயான போலீஸ் ஒருங்கிணைப்பில் உள்ள பிரச்சினை, மக்களவை தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்