< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாளை பெங்களூரு வருகை
|5 Nov 2022 4:45 AM IST
அன்றைய தினம் பகல் 2 மணிக்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் சர்வோதயா மாநாடு நடக்கிறது.
பெங்களூரு,
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வருகிறார். இதையொட்டி அவருக்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பகல் 2 மணிக்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் சர்வோதயா மாநாடு நடக்கிறது.
இதில் கர்நாடகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.