< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் தொடங்கியது
|17 Oct 2022 10:32 AM IST
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதுடெல்லி,
நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரியது காங்கிரஸ் கட்சி. அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டிருப்பது இது 6-வது முறை ஆகும். இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.
24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. தலைவர் தேர்தலில் ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.